பதிவு செய்த நாள்
10
செப்
2013
12:09
எதிரிக்கும் நல்லதே நினைக்கும் துலாம் ராசி அன்பர்களே!
எந்த கிரகமும் கோச்சாரப்படி, சொந்த வீட்டில் இருக்கும்போது அந்த ராசியினருக்கு நன்மை தருவதில்லை. இதற்கு விதிவிலக்கானவர் சுக்கிரன். தற்போது அவர் உங்கள் ராசியில் இருந்து நன்மை தருவார். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். பெண்களின் ஆதரவு கிடைக்கும். பொருள் வரவு இருக்கும். விருந்து விழா என சென்று வருவீர்கள். அக். 4ல் சுக்கிரன் 2-ம் இடம் சென்றாலும் தொடர்ந்து நன்மை தருவார். பொருளாதார வளம் சிறக்கும். மதிப்பு, மரியாதை உயரும். வியாபாரிகளுக்கு அரசு விஷயத்தில் சலுகை காண்பர். சூரியன் உங்கள் ராசிக்கு 12-ம் இடமான கன்னியில் உள்ளார். பணியில் இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. சூரியன் சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது பார்வையால் நன்மை ஏற்படும். பகைவர்களை வெற்றி கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதன் தொடக்கத்தில் 12ல் இருக்கிறார். எதிரி தொல்லை வரலாம். முயற்சியில் தோல்வியை சந்திக்கும் நிலை உருவாகலாம். உடல் நலத்தில் அக்கறை காட்டவேண்டியது இருக்கும். அவரது 7ம் பார்வையால் நன்மை கிடைக்கும். முயற்சி வெற்றி பெறும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடக்கும். பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். செப். 23-ந் தேதி துலாமிற்கு வருகிறார். குடும்பத்தில் சில பிரச்சினை வரலாம். உறவினர்கள் வகையில் கருத்துவேறுபாடு உண்டாகும். செவ்வாய்10ம் இடத்தில் இருப்பதால், உஷ்ணம், தோல் தொடர்பான நோய் வரலாம். களவு போக வாய்ப்பு உண்டு. பயணத்தின் போது கவனம் தேவை.அக். 9க்கு பிறகு அவர் சிம்ம ராசிக்கு வந்து நன்மை தருவார். குடும்பமகிழ்ச்சி கூடும். செவ்வாய் சாதமான இடத்திற்கு வருவதால் புதிய நிலம், மனை வாங்கலாம். போலீஸ், ராணுவத்தினர் சிறப்படைவர். விவசாயிகள் மேம்பாடு காண்பர். குருவால் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். உற்சாகம் பிறக்கும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். பின்னடைவுகள் மறையும். தம்பதி இடையே ஒற்றுமை மேம்படும். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு.
நல்ல நாட்கள்: செப்.20,21,22,23,29,30, அக்.1,2,3,6,7,11, 12,17
கவனநாட்கள்: செப்.24,25,26
அதிர்ஷ்ட எண்கள்: 2,5 நிறம்: வெள்ளை, மஞ்சள்
வழிபாடு: திருப்பதி பெருமாளை வழிபடுங்கள். காக்கைக்கு அன்னமிட்டு சாப்பிடுங்கள். விநாயகர் வழிபாடு முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.