பதிவு செய்த நாள்
10
செப்
2013
12:09
விடாமுயற்சியுடன் பணியாற்றும் விருச்சிக ராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு பகை கிரகமாக சூரியன் இருந்தாலும் அவர் கன்னி ராசியில் இருந்து நன்மை தருவார். அவரால் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். அரசு வகையில் நன்மை உண்டாகும். செவ்வாய் இந்த மாதத் தொடக்கத்தில் கடகத்தில் இருக்கிறார். இதனால் சில முயற்சிகளில் பின்தங்கும் நிலை வரலாம். பொருள் விரயம் உண்டாகும். செவ்வாய் சாதகமற்ற இடத்தில் இருந்தாலும், அவரது 7-ம் இடத்துப் பார்வை சிறப்பாக உள்ளது. பக்தியில் நாட்டமும், தெய்வ அனுகூலமும் கிடைக்கும். பொருளாதார வளம் மேம்படும். செவ்வாய் அக். 9ல் சிம்மத்திற்கு வருகிறார். அது சிறப்பான இடம் அல்ல. அவரால் உஷ்ணம், தோல், தொடர்பான பிரச்னை உண்டாகும். எதிரிகளால் தொல்லை உண்டு. உடல்நலனில் அக்கறை தேவைப்படும். வீட்டில் பொருள் களவு போக வாய்ப்பு உண்டு. புதன் 11ம் இடமான கன்னியில் இருக்கிறார். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். செப். 23ல், அவர் 12ம் இடத்திற்கு வருகிறார். அது சிறப்பான இடம் அல்ல. எதிரிகளால் தொல்லை வரலாம். முயற்சிகள் பின் தங்கலாம். உடல் நலத்தில் அக்கறை காட்டவேண்டியது இருக்கும். ஆனால், புதனின் பார்வை சிறப்பாக அமையும். சுப நிகழ்ச்சி நடந்தேறும். பணியில் இருப்பவர்கள் பதவி உயர்வு காண்பர். செல்வாக்கு அதிகரிக்கும்.சுக்கிரன் ராசிக்கு 12ல் இருப்பதால் சில தடைகள் உருவாகும். ஆனால், அக். 4ல் ராசிக்கு வந்து நன்மை தருவார். பெண்களால் நன்மை கிடைக்கும். பொருள் சேரும். முக்கிய கிரகங்களில் கேது மேஷத்தில் இருந்து நன்மை தருவார். அவரால் பொருளாதார வளம் அதிகரிக்கும். பகைவர் தொல்லை நீங்கும். ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள்.குரு சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது 7ம் பார்வையால் நன்மை கிடைக்கும். சனி,ராகு சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் குருவின் பார்வைபடுவதால் கெடுபலன் குறைந்து நன்மை உண்டாகும். சனி சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது பார்வையால் நன்மை உண்டு.
நல்லநாட்கள்:செப்.22, 23, 24,25,26,அக்.2,3,4,5,8,9, 10,13,14
கவன நாட்கள்: செப்.27,28
அதிர்ஷ்ட எண்கள்: 6,9 நிறம்: சிவப்பு, செந்தூரம்
வழிபாடு: சனிக்கிழமை பெருமாள் கோயிலுக்கு சென்று வாருங்கள். அம்பிகை வழிபாடு நல்லது. ஏழை குழந்தைகள் படிக்க உதவுங்கள். பசுவுக்கு அகத்திக்கீரை கொடுங்கள்.