பதிவு செய்த நாள்
10
செப்
2013
12:09
பரந்த மனப்பான்மை கொண்ட கன்னி ராசி அன்பர்களே!
நட்பு கிரகமான செவ்வாய் 11ல் இருக்கும் நிலையில் மாதம் தொடங்குகிறது. செயலில் வெற்றி உண்டாகும். பொருளாதார வளம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். செவ்வாய் அக். 9ல் 12-ம் இடமான சிம்மத்திற்கு மாறுகிறார். அதன்பின் நன்மை பெற இயலாது. உடல் உபாதை வரலாம். வீண் செலவும் ஏற்படும். இந்த காலத்தில் செவ்வாயின் பார்வை சாதமாக அமையும். அதன் மூலம் புதிய நிலம், மனைவாங்கும் எண்ணம் நிறைவேறும். சகோதரர்களின் ஒத்துழைப்பு சரியான சமயத்தில் கிடைக்கும். போலீஸ், ராணுவத்தினர் வளர்ச்சி காண்பர். சுக்கிரன் 2ல் இருப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். விரும்பிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். பெண்களால் உதவி கிடைக்கும். மதிப்பு, மரியாதை கூடும். அரசிடம் இருந்து விருது போன்றவை கிடைக்கும். வியாபாரிகளுக்கு அரசின் சலுகை கிடைக்கும். அக். 4ல் அவர் விருச்சிகத்திற்கு சென்றாலும் நன்மை தொடரும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். பிரிந்த தம்பதி ஒன்று சேர்வர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். உடல் நலம் சீராகும்.புதனும் சூரியனும் கன்னியில் இருக்கிறார்கள். அலைச்சலும் சோர்வும் உருவாகும். புதனால் வீட்டில் சில பிரச்சினை ஏற்படும். உறவினர்களிடம் கருத்துவேறுபாடு நேரும். பொருள் இழப்பு ஏற்படலாம். செப். 23ல் புதன் 2-ம் இடம் மாறுகிறார்.அதன்பின் பிரச்சினைமறையும். ஆனால் புதனால் சிலர் அவப்பெயருக்கு உள்ளாகலாம். வீண்விவாதங்களில் ஈடுபடாமல் ஒதுங்கி இருக்கவும். முக்கிய கிரகங்கள் எதுவும் சாதகமாக இல்லை என்றாலும், குரு,சனியின்பார்வை சாதகமாக உள்ளன. சனியின் பார்வையால் நன்மை சிறக்கும். ஆனால், எதையும் போராடி வெற்றி கொள்ள வேண்டியதிருக்கும். குருவின் பார்வையால் குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். மற்ற கிரகங்களின் பிற்போக்கான கெடுபலன்களை குரு முறியடிப்பார். சனி, ராகுவின் மீது குருவின் பார்வை விழுவதால் அவர்கள் கெடுபலனை தர மாட்டார்கள். மாறாக நன்மை உண்டாகும். இந்த மாதம் முழுதும் சிறப்பான பலன் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.
நல்ல நாட்கள்: செப்.17,18,19,20,21,27,28,29,30,அக்.1,4,5,8, 9,10,15,16,17
கவன நாட்கள்: செப்.22,23
அதிர்ஷ்ட எண்கள்: 3,8 நிறம்: வெள்ளை, சிவப்பு
வழிபாடு: விநாயகர் வழிபாடும், ஆஞ்சநேயர் தரிசனமும் நன்மை தரும். நவக்கிரக வழிபாடும் தேவை. ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள். சூரிய உதயத்தின் போது தூங்காமல் இருப்பது நல்லது.