சூலூர்: செங்கத்துறை மாகாளியம்மன் கோவில் பொங்கல் விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.சூலூர் அடுத்த செங்கத்துறை மாகாளியம்மன் கோவிலில், பொங்கல் விழா கடந்த 1ம்தேதி மினி விரட்டுதலுடன் துவங்கியது. 3ம்தேதி பொரி சாத்துதல் நிகழ்ச்சி நடந்தது. தினமும் அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. நேற்று முன்தினம் இரவு படைக்கலம் எடுத்தல், அம்மை அழைத்தல் நடந்தன. நேற்று ஏராளமான பெண்கள் முளைப்பாரி, பூவோடு எடுத்து வந்தனர். மகாலட்சுமி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். தொடர்ந்து சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடந்தது. பக்தர்கள் திரளாக வந்திருந்து பொங்கல் வைத்து வழிபட்டனர்.