பதிவு செய்த நாள்
13
செப்
2013
11:09
விழுப்புரம்: பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மர் பெருமாள் கோவிலின், மகா கும்பிஷேக பணிகள் நேற்று முதல்கால யாகசாலை பிரவேசத்துடன் துவங்கியது. பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மர் பெருமாள் கோவில் மகா கும்பிஷேகம் வரும் 16ம் தேதி காலை நடக்கிறது. இதனை முன்னிட்டு நேற்று (12ம் தேதி)முதற்கால பூஜை துவங்கியது. மாலை 6 மணிக்கு அனுக்ஞை, யஜமான ஸங்கல்பம், ஆச்சார்ய வர்ணம், விஷ்வக்ஷேஜ ஆராதனை, புண்யாகவாஜனம், யாக சாலை பிரவேசம், சோமகும்ப ஸ்தாபனம், அங்குரார்பனம், பூர்ணாஹூதி வேதபிரபந்த பாராயணம் சாற்றுமுறை முதல் கால ஆராதனை நடந்தது. செயல் அலுவலர் முத்துலட்சுமி, கோவில் அர்ச்சகர் பார்த்தசாரதி பட்டாச்சாரியார் உட்பட பலர் கலந்து கொண்டனர். இன்று (13ம் தேதி) காலை 8 மணிக்கு ரக்ஷõ பந்தனம், வாஸ்து ஹோமம், துவாரபூஜை,சாற்றுமுறை இரண் டாம் கால ஆராதனை மற்றும் மூன்றாம் கால ஆராதனை பூஜைகள் நடக்கிறது. வரும் 16ம் தேதி காலை மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.