பதிவு செய்த நாள்
14
செப்
2013
10:09
ஓமலூர்: ஓமலூர், சிந்தாமணியூர் அடுத்த செம்மாண்டப்பட்டி எல்லை, குண்டுமணி கரட்டில், சரபேஸ்வரர் கோவில், புதிதாக கட்டப்பட்டு, மஹா கும்பாபிஷேக விழா, வரும், 16ம் தேதி நடக்கிறது. இங்கு, தனி சன்னதியில், மூலவராக இருந்து அருள்பாலிக்கும் சரபேஸ்வரர், சரப்பட்சி எட்டு கால்கள், இரு இறக்கைகள், மான் மழு சர்பம் அக்னி என்கிற நான்கு கரங்களுடன் திகழ்கிறார். கருடனை போன்ற மூக்கு, ஒரு இறக்கையில் சூலினிதுர்க்கை, இன்னொரு இறக்கையில் பிரத்யங்கராதேவியுடன் இருக்கிறார். கடும் சினம் கொண்ட நரசிம்மரை சாந்தப்படுத்தி, அவருடன், காட்சியளிக்கும், சரபேஸ்வரருக்கு, தமிழகத்திலேயே, தனி சன்னதி, இங்கு நிறுவப்பட்டுள்ளது. செப் 15, காலை, 9 மணியளவில், மேட்டூரில் இருந்து புனிதநீர் கொண்டு வந்து, சிந்தாமணியூர் அதிவிநாயகர் கோவிலில் இருந்து, மேளதாளத்துடன், ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. வரும், 16ம் தேதி காலை, 9 மணிக்கு மேல், 10.30 மணிக்குள் சரபேஸ்வரர் கோவில் மஹா கும்பாபிஷேக விழா நடக்கிறது. அதனை தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. பரிகாரம் காண முடியாத பிரச்னைகளுக்கு சரபேஸ்வரரனை வழிப்பட்டால், தீர்வு கிடைக்கும் என்பது ஐதீகம்.விழா குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள், கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.