நான்குநேரி : நான்குநேரி அருகேயுள்ள முதலைகுளம் மயிலாடும் பாறை சுடலையாண்டவர் கோயில் கொடை விழா நடந்தது. கொடை விழாவை முன்னிட்டு முதல் நாள் அதிகாலை கும்பாபிஷேகம், தீபாராதனை நடந்தது. பகல் 12 மணிக்கு மதிய கொடை, அலங்கார தீபாராதனை, மாலை அன்னதானம் நடந்தது. இரவு சுவாமி மயானம் போய் வருதல், தொடர்ந்து கைவெட்டு, நாக்குவெட்டு, ஆகாய பூஜை ஆகியன நடந்தது. மறுநாள் காலையில் பொங்கல் வழிபாடு நடந்தது. ஏற்பாடுகளை முதலைகுளம் நாடார் சமுதாயத்தினர் செய்திருந்தனர்.