பதிவு செய்த நாள்
19
செப்
2013
10:09
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலின், இரண்டு உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டு, பக்தர்கள் செலுத்தி காணிக்கை தொகை கணக்கிடப்பட்டது. இதில், மொத்தமாக, 1.80 கோடி ரூபாய், காணிக்கை செலுத்தியது, கண்டறியப்பட்டது. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், உலக பிரசித்தி பெற்றது. தமிழகத்தின், 108 திவ்ய தரிசனங்களுள் ஒன்று. இக்கோவிலின் உண்டியல் காணிக்கை, ஆண்டுக்கு ஒருமுறை எண்ணப்படும். இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் தலைமையில், நேற்று பார்த்தசாரதி கோவிலுக்குச் சொந்தமான, இரண்டு உண்டியல்களில் செலுத்தப்பட்ட காணிக்கை தொகை, கணக்கிடப்பட்டது. இதில், மொத்தமாக, 1,80, 33,315 ரூபாய் இருந்ததை அதிகாரிகள் கணக்கிட்டனர். ஒவ்வொரு ஆண்டும், பார்த்தசாரதி கோவில், உண்டியல் காணிக்கை, கணக்கிடும் போது, ஒரு கோடி ரூபாய்க்கு மேல் இருப்பது, வழக்கம். இந்த ஆண்டு, கூடுதலாக, 80 லட்சம் ரூபாய் வசூலாகி இருப்பது, குறிப்பிடத்தக்கது.