பதிவு செய்த நாள்
19
செப்
2013
10:09
சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவிலில், சித்தர்கள் ஞானபீடம் அமைப்பு சார்பில், இன்று காலை, 6 மணி முதல் கோவிலின், 1,320 படிக்கட்டுகளுக்கும், படி பூஜை நடக்கிறது. சென்னிமலை சித்தர் சரவணன் தலைமையில் ஒவ்வொரு படியாக தேங்காய், பழம், நெய்வேத்தியம் வைத்து, பூஜை செய்கின்றனர். இறுதியாக மதியம், 2 மணிக்கு மேல், முருகப்பெருமானுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன் உட்பட, 20 வகையான அபிஷேகம் நடக்கிறது. மேலும் கங்கை நதி உட்பட, 16 நதிகளின் தீர்த்த அபிஷேகமும், அன்னதானமும் நடக்கிறது.