பதிவு செய்த நாள்
19
செப்
2013
10:09
சென்னை: பவுர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலைக்கு, 600 சிறப்பு பஸ்களை, விழுப்புரம் போக்குவரத்து கழகத்தினர் இயக்கினர். நேற்று (18ம் தேதி), பவுர்ணமி தினத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு, கிரிவலம் செல்வதற்காக, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சென்றனர். அவர்களின் வசதிக்காக, விழுப்புரம் போக்குவரத்து கழகம் சார்பில், சென்னை, விழுப்புரம், காஞ்சிபுரம், கடலூர், பன்ருட்டி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, சிறப்பு பஸ்களை இயக்கினர். இது குறித்து, விழுப்புரம் போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது: கிரிவலத்திற்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக, மாலை, 5:00 மணி வரை, 300 சிறப்பு பஸ்களை இயக்கினோம். இரவு வேளையில், அதிக பயணிகள் வருவதை அடுத்து, கூடுதலாக,300 பஸ்கள் என மொத்தம், 600 பஸ்கள் இயக்கப்பட்டன. இவ்வாறு, அவர் கூறினார்.