பதிவு செய்த நாள்
07
அக்
2013
11:10
உடுமலை: உடுமலை சுற்றுப்பகுதியில் உள்ள கோவில் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் நவராத்திரி விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. உடுமலை பகுதியில் கடந்த 5ம் தேதி நவராத்திரி விழா துவங்கியது. கோவில்களில், நவராத்திரி விழாவையொட்டி சிறப்பு பூஜைகளும், சிறப்பு அலங்காரம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெறுகிறது. இதில், உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், கடந்த 5ம் தேதி விசாலாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பின் காலை 9:00 மணிக்கு சன்மார்க்க கொடி மற்றும் கார்த்திகை விழா மன்ற கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து 13ம் தேதி வரை சிறப்பு பூஜைகளும் நடைபெறுகிறது. விழாவையொட்டி, கார்த்திகை விழா மன்றத்தின் சார்பில், 52ம் ஆண்டு நவராத்திரி இசை, இலக்கிய கலை விழா நடைபெறுகிறது. வரும் 13ம் தேதி வரை தினசரி மாலை 6:00 மணிக்கு திருமுறை இசை அரங்கம், இசை நிகழ்ச்சி, ஆன்மிக பேரூரை,பண்ணும் பரதமும் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. வீடுகளிலும் கோலாகலம் நவராத்திரி விழாவையொட்டி, உடுமலை பகுதியில் உள்ள வீடுகளிலும் மக்கள் கொலு வைத்து கொண்டாடி வருகின்றனர். வீடுகளில், கொலு பொம்மைகள் வரிசையாக வைத்து, தினசரி சுண்டல் உள்ளிட்டவை படைத்து நவராத்திரியை கொண்டாடி வருகின்றனர்.