புதுச்சேரி: வன்னிய பெருமாள் கோவிலில் நடந்த நவராத்திரி விழாவில் அலர்மேல்மங்கை தாயார், ஆதிலட்சுமி அலங்காரத்தில் அருள்பாலித்தார். முதலியார்பேட்டை வன்னிய பெருமாள் கோவிலில் நவராத்திரி விழா நேற்றுமுன்தினம் துவங்கியது. வரும் 14ம் தேதி வரை நடக்கும் விழாவில், தினந்தோறும் அலர்மேல்மங்கை தாயாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. முதல் நாளில் அலர்மேல்மங்கை தாயார், ஆதிலட்சுமி அலங்காரத்தில் அருள்பாலித்தார்.