பதிவு செய்த நாள்
09
அக்
2013
06:10
இனிமையாகப் பேசி மகிழும் துலாம் ராசி அன்பர்களே!
ராசி நாதன் சுக்கிரன் 2-ம் இடத்தில் இருப்பதால் பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். சமூகத்தில் மரியாதை கூடும். அரசிடம் இருந்து விருது போன்றவை கிடைக்கும். வியாபாரிகளுக்கு அரசின் சலுகை கிடைக்கும். அக்.31ல் சுக்கிரன் 3-ம் இடத்திற்கு செல்கிறார். அதன்பின் அவரால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். உடல் நலம் சிறப்படையும்.சூரியன் உங்கள் ராசிக்கு வந்து சனிபகவான்-ராகுவுடன் இணைகிறார். சூரியன் இந்த இடத்தில் இருக்கும்போது அலைச்சலும் சோர்வும் ஏற்படும். செல்வாக்கு பாதிக்கப்படலாம். புதனால் குடும்பத்தில் சில பிரச்னை வரலாம். உறவினர்கள் வகையில் கருத்துவேறுபாடு உருவாகும். பொருள் இழப்பு ஏற்படலாம். உத்தியோகம் பார்ப்பவர்கள் இடமாற்றத்தை காணலாம். அக்.24 முதல் நவ.14 வரை புதன் வக்கிரம் அடைகிறார். அந்த காலத்தில் குடும்பத்தில் நன்மை மேலோங்கும். ஆனால் எதிரிகளால் தொல்லை வரலாம். உங்கள் முயற்சிகளில் தோல்வி, தடை உருவாகலாம். ராசிக்கு நட்பு கிரகமான செவ்வாய் 11-ம் இடமான சிம்மத்தில் உள்ளார். இது சிறப்பான இடம். அங்கு அவரால் செயலில் வெற்றி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மேலும் செவ்வாயின் பார்வையாலும் நன்மை கிடைக்கும். பொருளாதார வளம் அதிகரிக்கும். பகைவர்களின் தொல்லை நீங்கும். உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். விரும்பிய ஆடை, ஆபரணம் வாங்கலாம். செவ்வாயின் பலத்தால் புதிய சொத்தாக நிலம், வீடு வாங்க யோகமுண்டு. பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் முன்னேற்றத்தை காண்பர். குருவாலும் நன்மை தொடரும். அவர் அக்.24 முதல் வக்கிரம் அடைகிறார். அதன்பின் நன்மை சற்று குறைந்தாலும் பாதிப்பு ஏற்படாது.
நல்ல நாட்கள்: அக்.18,19,20,26,27,28,29,30,நவ.3,4,7,8, 13, 14, 15,16
கவன நாட்கள்: அக்.21,22,23
அதிர்ஷ்ட எண்: 3,5 நிறம்: வெள்ளை, சிவப்பு
வழிபாடு: பெருமாள், ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்லுங்கள். பசுவுக்கு பசுந்தழை போடுங்கள்.சனிக்கிழமை சனிபகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள்.