பதிவு செய்த நாள்
09
அக்
2013
06:10
அனைவரிடமும் அன்புடன் பழகும் கன்னிராசி அன்பர்களே!
அறிவுபூர்வமாக செயல்பட்டு வருவீர்கள். ராசி கன்னி என்பதால் எதிலும் அனுசரணையான போக்கு இருக்கும். இந்த மாதம் சுக்கிரன் நன்மைகளை வாரி வழங்குவார். மாதத் தொடக்கத்தில் 3-ம் இடத்தில் இருக்கும் சுக்கிரனால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். கணவன், மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடு மறையும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். பணியாளர்களுக்கு சலுகை பயன்களும், பதவி உயர்வும் கிடைக்கும். உடல் நலம் சிறப்படையும். அக்.31ல் சுக்கிரன் 4-ம் இடத்திற்கு செல்வதால் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உறவினர்களிடம் சுமூக நிலை ஏறபடும். புதிய உறவினர்களால் உதவி கிடைக்கும்.ராசிநாதன் புதன் இந்த மாதம் 2-ம் இடத்தில் இருப்பதால் அவப்பெயர் வரலாம். உங்கள் செல்வாக்குக்கு பாதிப்பு ஏற்படலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். அக்.24ல் அவர் வக்கிரம் அடைந்து உங்கள் ராசிக்கு வருகிறார். இதனால் வீட்டினுள் சில பிரச்சினை வரலாம். உறவினர்கள் வகையில் கருத்துவேறுபாடு உருவாகும். பொருள் இழப்பு ஏற்படலாம். உத்தியோகம் பார்ப்பவர்கள் இடமாற்றத்தை காணலாம். அதேநேரம் புதன் உங்கள் ஆட்சி நாயகன் என்பதால் அவரால் கெடுபலன்கள் உங்கள் மனதை வாட்டாது. கூடவே நிவாரணம் பெறவும் வழிவகை செய்வார்.உங்கள் நட்பு கிரகமான செவ்வாய் 12-ம் இடத்தில் உள்ளார். இதனால் பித்தம், மயக்கம் போன்ற உபாதைகள் வரலாம். ஆனால் அதனால் பாதிப்பு ஏதும் ஏற்படாது.முக்கிய கிரகங்களான சனிபகவான் மற்றும் ராகு 2-ம் இடத்தில் இருக்கிறார்கள். அவர்களால் நன்மை ஏதும் இல்லை என்பதை ஏற்கனவே அறிந்திருப்பீர்கள். இந்த மாதம் அவர்களோடு சூரியனும் இணைகிறார். இடமாற்றம் ஏற்படலாம். உடல் நலம் லேசாக பாதிக்கப்படும். அதே நேரம் குருவின் பார்வை அவர்கள் மீது விழுவதால் கெடுபலன்கள் அதிகம் நடக்காது. குருபகவான் 10ல் இருப்பது சாதகமானது அல்ல என்றாலும் அவர் அக்.22 முதல் வக்கிரம் அடைவது உங்களுக்கு சாதகமானது. அவர் நன்மை தரவும் தவறமாட்டார்.
நல்ல நாட்கள்: அக்.18, 24,25,26,27,28,31,நவ.1,2,5,6,11,12,13,14
கவன நாட்கள்: அக்.19,20, நவ.15,16
அதிர்ஷ்ட எண்கள்: 4,6 நிறம்: பச்சை
வழிபாடு: தினமும் சூரியனை தரிசனம் செய்யுங்கள். நவக்கிரகங்களை வழிபட்டு வாருங்கள். சனிக்கிழமை சனீஸ்வரனுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். ராகு கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள்.