பதிவு செய்த நாள்
10
அக்
2013
10:10
நவராத்திரி ஏழாம்நாளான அம்பாளை வித்யாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். தாமரை மலர் ஆசனம் அமைத்து, இருபுறமும் யானை பொம்மை வைக்க வேண்டும். மதுரை மீனாட்சியம்மன் முத்தங்கி சேவை அலங்காரத்தில் காட்சி தருகிறாள். மலையத்துவஜ பாண்டியன் குழந்தைப்பேறு இல்லாமல் வருந்தினான். அவன் புத்திரகாமேஷ்டியாகம் செய்தபோது, யாகத்தீயில் பார்வதிதேவியே குழந்தையாகத் தோன்றினாள். அவளுக்கு "தடாதகை என்னும் பெயரிட்டான். அவளது கண்கள் மீன் போல் அழகாய் இருந்தததால் "அங்கயற்கண்ணி என்றும் "மீனாட்சி என்றும் பெயர் பெற்றாள். வீரம் மிக்க இளவரசியான அவள், எல்லா மன்னர்களையும் வென்று, சிவன் ஆளும் கயிலாயத்தையும் பிடிக்கச் சென்றாள். சிவனைக் கண்டதும், நாணம் கொண்டாள். உலகாளும் சிவனையே, தன் மணாளனாக ஏற்றாள். முத்துக்குப் பேர் பெற்ற பாண்டிய நாட்டின் அரசியான அவள், நாளை முத்தங்கியில் காட்சி தருகிறாள்.
நைவேத்யம்: தேங்காய் சாதம்
தூவ வேண்டிய மலர்: மல்லிகை, வெள்ளைத்தாமரை
பாட வேண்டிய பாடல்:
அருள்மழை பொழியும் சுடர்மணி விழியே
ஆலவாய் ÷க்ஷத்திர ஒளியே உமையே
வருவினை தீர்க்கும் ஜெகத் ஜனனி நீயே
வைகைத் தலைவியே சரணம் தாயே.