மேலூர்: அரிட்டாபட்டியில் மத்தம் மேலைநாட்டிற்குட்பட்ட, இளமநாச்சியம்மன் கோயில் உள்ளது. வறட்சி நிலவும் போது, மழை வேண்டி இக்கோயிலில் சிறப்பு திருவிழா நடத்தப்படும். நேற்று கீழமந்தை, மேலமந்தை மற்றும் பேக்காலிபட்டி மந்தை மக்கள் இணைந்து விழா நடத்தினர். அம்மன் எடுப்பு, மாவிளக்கு பூஜை நடந்தது. புலி வேடம், வேப்பிலை ஆட்டம், கோமாளி ஆட்டம், குறவன் குறத்தி ஆட்டம், வைக்கோல் பிரி சுற்றி ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.