கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் தெப்பக்குளத்துக்கு நீர்வரத்து அதிகரிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21அக் 2013 12:10
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் தெப்பக்குளம் கோவிலின் வடக்குப் பகுதியில் சுமார் 0.5 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. 3 பக்கங்கள் மதில் சுவர்களையும், தென்புறம் பாறையையும் எல்லைகளாகக் கொண்ட இத்திருக்குளத்தின் வடபுறம், மேல்புறம் மற்றும் தென்மேற்கு மூலை ஆகிய இடங்களில் படிக்கட்டுகள் உள்ளன. இதில் கடந்த சில ஆண்டுகளாகவே நீர்வரத்து இல்லை. இந்நிலையில் ஏப்ரல் மாதம் நடைபெற்ற தெப்பத் திருவிழாவையொட்டி நீர் நிரப்பும் பணி நடைபெற்றபோது, தெப்பத்தில் அகத்தியர் சிலையின் அருகில் அமைந்துள்ள கெண்டியின் வாய் போன்ற பகுதியிலிருந்து நீர்வரத்து காணப்பட்டது.கோவில்பட்டியில் இப்போது லேசான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கெண்டியின் வாய் போன்ற பகுதியிலிருந்து வெள்ளிக்கிழமை முதல் நீர்வரத்து மீண்டும் தொடங்கியது.