பழநி முருகøனை மொட்டையாண்டி என்று சிலர் குறிப்பிடுவர். துறவியாக கோவணம் அணிந்து தண்டாயுதம் ஏந்திய கோலத்தை இப்படி சொல்வர். ஆனால், பழநிமுருகனுக்கு மொட்டைத்தலை கிடையாது என்கிறது தலபுராணம். மெல்லிய அழகான கூந்தலுடன் இருப்பதை ஒண்மீக் குடுமியழகு (பிரகாசமான கூந்தல்) என்றே சொல்கிறது. ஆண்டிக்கோலத்தில் முருகனைத் தரிசித்தால் ராஜ அலங்காரத்திலும் காண வேண்டும் என்று சொல்வதற்குஅடிப்படை காரணம் ஏதுமில்லை.முருகனை எந்தக் கோலத்தில் பார்த்தாலும் அருள்புரிவார்.