தசரதருக்கு புத்திரசோகம் உண்டாகும் என்று சாபம் இட்டவர் ஜலபோஜனன். இவருக்கும் இவருடையமனைவிக்கும் பார்வை கிடையாது. இவர்களின் மகன்சிரவணன், பெற்றோரைக் காவடி போல கட்டி, தோளில் சுமந்தபடியே செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்வான். ஒருமுறை காட்டில், இவன் பெற்றோரின் தாகம் தணிக்க நீர் எடுக்கப் புறப்பட்டான். அங்கு வேட்டைக்கு வந்த தசரதர், தண்ணீர் எடுத்த ஒலியைக் கேட்டு யானை என தவறாக நினைத்து அம்பு தொடுத்தார். சிரவணன் மீது அது பட்டு அலறினான்.சப்தம் கேட்டு ஓடி வந்த தசரதரிடம், இந்த நீரைக் கொடுத்து பெற்றோர் தாகம் போக்கும்படி உயிர் பிரிந்த நேரத்திலும் வேண்டினான். சிரவணன் என்ற சொல்லுக்கு கேட்பவன் என்று பொருள். பெற்றோரின் பேச்சைக் கேட்கும் பிள்ளையாக சிரவணன் இருந்தான்.ராமாயணத்தில் இடம்பெற்ற இந்தக்கதை, தன் வாழ்வில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியதாகக் காந்திஜி குறிப்பிடுகிறார்.