பதிவு செய்த நாள்
08
நவ
2013
06:11
தூத்துக்குடி: வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற லட்சக்கணக்காக பக்தர்களின் கோஷம் விண்ணதிர, திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் ஆணவம் கொண்டு போரிட்ட சூரனை, சுவாமி ஜெயந்திநாதர் சம்ஹாரம் செய்தார். திருச்செந்தூர் முருகன்கோயில் கந்தசஷ்டி விழா, நவ.,3 ல் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று (நவ.,8 ல்)நடந்தது. கோயில் நடை, அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. மாலை கஜமுகன், சிங்கமுகன், சூரபத்மனாய் அடுத்தடுத்து வலம் வந்து ஆணவத்துடன் போரிட்ட சூரனை, சுவாமி ஜெயந்திநாதர் தன்னுடையே வேலால் சம்ஹாரம் செய்தார். அப்போது, அங்கு கூடியிருந்த பக்தர்கள், "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என கோஷமெழுப்பினர். பின்னர், சேவல் உருவத்தில் போரிட்ட சூரனை, சுவாமி தன்னுடைய சேவற்கொடியாகவும், மாமரமாகவும் ஆட்கொண்டார். சம்ஹாரம் முடிந்ததும், சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுக்கு, சந்தோஷ மண்டபத்தில் அபிஷேகம், தீபாராதனை நடந்தது.