பதிவு செய்த நாள்
09
நவ
2013
10:11
பழநி: பழநியில் வாழைத்தண்டு, பழக்கூட்டு நைவேத்யத்துடன் கந்த சஷ்டி விரதத்தை பக்தர்கள் முடித்தனர். நவ.,3 முதல் சஷ்டி விரதமிருந்த பக்தர்கள், நேற்று பழநி மலைக்கோயில், திருஆவினன்குடி கோயில்களில் விரதத்தை முடிப்பதற்காக, குழுக்களாக அமர்ந்து, வாழைத்தண்டு, பழங்கள், காய்கறி, தயிர் சேர்த்து, நைவேத்ய பிரசாதம் தயாரித்தனர். மலர் அலங்காரத்துடன் தீபம் ஏற்றி வழிபாடு செய்து, கருவறையில் சுவாமிக்கு நைவேத்யம் செய்து, வாழைத்தண்டுடன், தயிர் கலந்து பிரசாதத்தை பக்தர்களுக்கு வழங்கினர். கே.சுப்ரமணி,பக்தர், பழநிகூறுகையில், ""பல ஆண்டுகளாக கந்த சஷ்டிவிரதத்தை மேற்கொண்டுவருகிறேன். ஒருவாரம் முழுவதும், கந்தபுராணம், கந்த சஷ்டிக்கவசம் படித்து, சூரசம்ஹாரத்தன்று விரதத்தை நிறைவு செய்துவது வழக்கம். அதன்படி, வாழைத்தண்டுடன், பழங்களை சேர்த்து தயாரித்து, நை வேத்யத்தை சுவாமிக்கு படைக்கிறோம், என்றார்.