புதுவை கவுசீக பாலசுப்ரமணியர் கோயிலில் கடல் தீர்த்தவாரி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13நவ 2013 10:11
புதுவை ரயில் நிலையம் அருகே கவுசீக பாலசுப்ரமணியர் கோயில் கந்தர் சஷ்டி சூரசம்ஹாரத் திருவிழா கடந்த நவம்பர் 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 8-ஆம் தேதி சூரபத்மனை முருகப்பெருமான் சக்தி வேலால் வதம் செய்யும் சூரசம்ஹார விழா நடைபெற்றது. திருக்கோயில் வளாகத்தில் 9-ஆம் தேதி காலை கவுசீக பாலசுப்ரமணியர் வள்ளி, தேவசேனா திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை கவுசீக பாலசுப்ரமணியருக்கு கடற்கரையில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.