கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள சூளகிரியின் அருகே உள்ளது கோபசமுத்திரம் கிராமம். இங்குள்ள வெங்கடேசுவர சுவாமி திருக்கோயில் சுமார் ஐந்நூறு ஆண்டுகளுக்கும் முந்தையது. இங்கு வருடம்தோறும் சித்திரைத் திங்களில் தேர்த் திருவிழா நடைபெறும். அப்போது தேரோட்டம் உண்டு. இங்குள்ள தேரின் சக்கரங்கள் கல்லால் ஆனபோதும் இன்றுவரை நல்ல நிலையில் இயங்கி வருகிறது. இவ்வாறு கல் சக்கரங்களைக் கொண்ட தேர் அபூர்வம்.