திருவாரூரில் மட்டுமே பாரிநாயனமும் சுத்த மத்தளமும் இசைக்கப்படுகின்றன. திருவரங்கத்தில் வைகுண்ட ஏகாதசியன்று தக்கை என்ற இசைக்கருவி வாசிக்கப்படுகின்றது. கீழ்வேளூரில் கிடிகிட்டி தினசரி முழங்கப்படுகிறது. ஆவுடையார் கோயிலில் மட்டுமே கெத்து வாத்தியம் இசைக்கப்படுகிறது.வைத்தீஸ்வரன் கோயிலில் ஸ்வரமண்டலம் என்ற நரம்புக்கருவி இசைக்கப்படுகிறது. திருவண்ணாமலையில் மட்டுமே வுடல் என்ற தோல்கருவி வாசிக்கப்படுகிறது.