மதுராவிலிருந்து ஒன்பதாவது கிலோ மீட்டரில் பிருந்தாவனம் உள்ளது. இங்கு தான் கிருஷ்ணன் பல லீலைகளைச் செய்தான். இங்கு பல படித்துறைகள் உள்ளன. இவற்றில் க்ஷீரகாட் என ஒரு துறை உள்ளது. இதன் கரையில் ஒரு புன்னை மரம் உள்ளது. இந்த மரத்தில்தான், கோபிகா ஸ்திரீகளின் புடவைகளைக் கவர்ந்து சென்று கட்டியும் மறைத்தும் வைத்ததாக ஐதீகம்!