குமரியில் சென்னை பக்தர்களின் இருமுடிகட்டுகள் திருட்டு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21நவ 2013 11:11
நாகர்கோவில்: கன்னியாகுமரி வந்த சென்னை ஐயப்ப பக்தர்களின் வேனை உடைத்து இருமுடிகட்டுகள் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டது. சபரிமலை செல்லும் ஐயப்பபக்தர்கள் பெரும் பாலோனோர் கன்னியாகுமரி வந்துசெல்கின்றனர். முக்கடல் சங்கமத்தில் புனிதநீராடி பகவதியம்மனை தரிசனம் செய்கின்றனர். மேலும் சுவாமி விவேகானந்தர் நினைவுமண்டபம் மற்றும் சூரியஉதயம் மற்றும் அஸ்தமனம் ஆகியவற்றை கண்டுரசிக்கின்றனர். நேற்று அதிகாலை சென்னையை சேர்ந்த 12 ஐயப்பபக்தர்கள் கன்னியாகுமரி வந்தனர். காட்சிகோபுரம் அருகே தங்களின் வேனை நிறுத்திவிட்டு சூரியஉதயத்தை காணசென்றனர். பின்னர் பகவதியம்மனை தரிசனம் செய்துவிட்டு கடைகளின் பொருட்கள் வாங்கிவிட்டு காலை 8 மணியளவில் வேனுக்கு திரும்பி வந்தபோது வேனின் கண்ணாடிகளை உடைத்து நான்கு இருமுடிகட்டு மற்றும் 20 ஆயிரம் ரூபாய் உள்ளிட்டவைகள் திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து கன்னியாகுமரி போலிசில் தகவல் தெரிவித்து விட்டு புகார் கொடுக்காமல் சென்றனர்.