பதிவு செய்த நாள்
25
நவ
2013
11:11
தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்ரீஇசக்கிதேவி நிலைய கும்பாபிஷேக விழா நடந்தது. தூத்துக்குடி வடக்கு தெருவில் 185 வருடங்கள் பழமைவாய்ந்த பழையனூர் நீலி இசக்கிதேவி நிலைய கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 20ம் தேதி அதிகாலை அனுக்கை, விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாகனம், பஞ்சகவயம், ஸ்ரீமகா கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம் பிரம்மசாரி பூஜை, கோபூஜை, கஜபூஜை, தனபூஜை, கன்யாபூஜை, பூர்ணாகுதி தீபாராதனையும், மாலையில் முதல்கால யாகசாலை பூஜையும் நடந்தது. மறுநாள் (21ம் தேதி) காலை விக்னேஸ்வர பூஜை, விசேஷ சந்தி, இரண்டாம் கால யாகசாலை பூஜை, இரவு யந்திரஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடந்தது. 22ம் தேதி நான்காம் கால யாகசாலை பூஜை, கடம் எடுத்தருளல் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து ஸ்ரீஇசக்கிதேவி நிலைய விமான கோபுரம் மற்றும் மூலஸ்தானம், மஹா கும்பாபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. ஸ்ரீஇசக்கிதேவி நிலைய அஷ்டபந்தன கும்பாபிஷேகத்தை ஆலால் சுந்தர வேத சிவகாம வித்யாலய முதல்வர் பிராதன ஸ்தானிக்கர் சர்வசாதகம் சாம்ராஜ்ய ஸ்ரீசெல்வம்பட்டம் தலைமையில் குருக்கள் செய்தனர். ஸ்ரீஇசக்கிதேவி நிலைய கும்பாபிஷேக விழாவில் அழகர் குரூப்ஸ் நிர்வாக இயக்குநர் ஜெயராமன், பத்மநாபன், ராதா, அருணா குரூப்ஸ் பழனியப்பன், சிவசேகர், மாரியப்பன், சண்முகசுந்தரம், ஸ்ரீசுப்பையா ஜூவல்லரி மார்ட் ராஜேந்திரன், ‹ர்யா சர்வீஸ் சென்டர் முத்தையா, பொதிகை ஸ்வீட்ஸ், திருவடி, ஸ்ரீம்துர்கா லாரி சர்வீஸ் சுந்தர்ராஜன் சுப்பையா, முத்துச் சுப்பையா, நியூ பரணி பேரிங்ஸ் பூபேஷ், சுரேஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை குழுத்தலைவர் கே.கே.குருசாமி அன்கோ இளங்குமரன், கோவில் கோமரத்தாடி இசக்கியப்பன், இசக்கி கண்ணன், இசக்கி சக்கரவர்த்தி மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் செய்திருந்தனர். மதியம் 12 மணிக்கு கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு அன்னதானம் நடந்தது. நிகழ்ச்சியை திமுக இளைஞரணி ஜெகன் துவக்கி வைத்தார்.