முரளிதர ஸ்வாமிஜி பாகவதம் அருளுரை வரும் 1 முதல் 7 வரை நடக்கிறது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25நவ 2013 11:11
தூத்துக்குடி: தூத்துக்குடி நாமத்வார் பிரார்த்தனை மையத்தின் சார்பில் வரும் 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை ஸ்ரீஸ்ரீமுரளிதர ஸ்வாமிஜியின் ஸ்ரீமத் பாகவதம் அருளுரை நடக்கிறது. தூத்துக்குடி நாமத்வார் பிரார்த்தனை மையத்தின் சார்பில் தினமும் காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணிவரை ஸ்ரீமத் பாராயணம் நடைபெறும். பின்னர் மாலை 6.45 மணி முதல் இரவு 8.45 மணிவரை ஸ்ரீஸ்ரீமுரளிதர ஸ்வாமிஜியின் ஸ்ரீமத் பாகவதம் அருளுரை தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் முதல் நாள் ஸ்ரீமத் பாகவதம் பிறந்த கதை, இரண்டாம் நாள் துருவன் சரித்திரம், மூன்றாம் நாள் அஜாமிளன் சரித்திரம், நான்காம் நாள் பிரஹலாதன் சரித்திரம், ஐந்தாம் நாள் வாமன அவதாரம், ஆறாம் நாள் க்ருஷ்ணன் பிறந்தது. ஏழாம் நாள் ருக்மணி கல்யாணம் ஆகிய தலைப்புகளில் அருளுரையாற்றி பக்தர்களுக்கு ஆசி வழங்க உள்ளனர். ஏழு நாட்கள் நடக்கும் நிகழ்ச்சியில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு இறையருள் பெற நிர்வாகிகள் கேட்டுக்கொள்கின்றனர். ஏற்பாடுகளை தூத்துக்குடி நாமத்வார் பிரார்த்தனை மையம் மற்றும் காட் இந்தியா டிரஸ்ட் நிர்வாகிகள் செய்துவருகின்றனர்.