திருமணத்திற்கு ஜாதகப் பொருத்தம் கட்டாயம் பார்க்க வேண்டுமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26நவ 2013 03:11
உறவுமுறையில் பெரியவர்களால் நிச்சயிக்கப்படும் திருமணத்திற்கு ஜாதகம் பார்ப்பது வழக்கில் இல்லை. பெரியவர்களின் மனமார்ந்த ஆசி கிடைப்பதால் தோஷங்கள் நீங்கி விடும். முன்பின் அறிமுகமில்லாத குடும்பத்தில் சம்பந்தம் செய்து கொள்ளும்போது ஜாதகப் பொருத்தம் பார்த்து செய்வது நல்லது. மணமகன், மணமகள் இவர்களது குணங்கள் மற்றும் எதிர்கால வாழ்க்கை நிலை பற்றி அறிந்து சேர்த்து வைக்கலாம். பொருத்தம் பார்க்க வேண்டாம் என்றால் சுவாமியிடம் பூக்கட்டி வைத்து உத்தரவு கேட்டு திருமணம் செய்யலாம். பெற்றோர், பெரியவர்களின் அறிவுரை திருமண விஷயத்தில் மிக முக்கியமானது.