பதிவு செய்த நாள்
03
டிச
2013
11:12
காஞ்சிபுரம்: ரத்தின அங்கி சேவையில் வரதராஜபெருமாள், ஊர்வலத்தில் தாயாருடன் காட்சி அளித்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில், தாத்தாச்சாரியார் அவதார உற்சவத்தை முன்னிட்டு, 10 நாள் உற்சவம் நடந்தது. நிறைவு நாளான நேற்று, பெருமாள் அஸ்தகிரி மலையிலிருந்து, காலை, 10:00 மணிக்கு, ரத்தின அங்கி அணிந்து வந்தார். பின், தாயாருடன் தாத்தாச்சாரியார் சன்னிதியில் எழுந்தருளினார். அதன்பின், தாயாருடன் பெருமாள் ஆழ்வார் சன்னிதி வழியாக ஊர்வலம் வந்து, தாத்சாரியார் மண்டபத்திற்கு சென்றனர். ஆண்டிற்கு, இரண்டு முறை மட்டும் ரத்தின அங்கி சேவை நடைபெரும். கார்த்திகை மாத அனுஷ நட்சத்திரம் அன்றும், மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதேசி அன்றும், பெருமாள் காட்சியளிப்பார். அதே போல், தாயாரும் ஆண்டுக்கு ஒரே நாள் மட்டும், தங்ககிரிடம் அணிந்து இந்நாளில் காட்சியளிப்பார். பகல் 1:00 மணிக்கு, ரத்தின அங்கி கலைக்கப்பட்டு பெருமாள், தாயாருக்கு திருமஞ்சனம் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, பெருமாள், ஆஞ்சநேயர் சன்னிதிக்கு புறப்பட்டு சென்றார். தாத்தாசாரியார் சன்னிதியில், மாலை சாற்று முறை முடிந்து.