பதிவு செய்த நாள்
07
டிச
2013
10:12
ஈரோடு மாநகர் பிரப் ரோடு, கைக்கோளன் தோட்டம், செல்வவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம் டிச 6; நடந்தது. ஈரோடு கைக்கோளன் தோட்டத்தில் உள்ள செல்வவிநாயகர் கோவிலில், திருப்பணிகள் நிறைவு பெற்று, கும்பாபிஷேக விழா பூஜைகள், ஐந்தாம் தேதி கணபதி வழிபாட்டுடன் துவங்கியது. கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமங்கள் நடந்தது. பின்னர் கணபதி வழிபாடு, வாஸ்து சாந்தி, யாக பூஜைகள் நடந்தது. டிச 6; காலை மூலமந்திரம், காயத்திரி மந்திரம், அஸ்தர ஹோமங்கள், திரவியாஹூதி, கலசங்கள் கோவிலுக்கு எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. காலை, எட்டு மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, தச தரிசனம் ஆகியவை நடந்தது. கும்பாபிஷேகத்தை அர்த்தநாரீஸ்வர சிவாச்சாரியார் நடத்தினார். ஏற்பாடுகளை கைக்கோளன் தோட்டம் நிர்வாகி மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர். நூற்றுக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேகத்தை தரிசித்தனர். தொடர்ந்து, ஆயிர நகர வைசியர் திருமண மண்டபத்தில், அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.