திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று தொடங்கியது. கோவிலில் கார்த்திகைதீப திருவிழா முடிந்ததும் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கை பணம் எண்ணப்படும். இந்த ஆண்டு கார்த்திகை தீப திருவிழாவில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். தீப திருவிழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் சிறப்பு உண்டியல்கள், வெள்ளி உண்டியல் வைக்கப்பட்டிருந்தது. நேற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடங்கியது. முதல் நாளான நேற்று ரூ.97 லட்சம் இருந்தது. மேலும் 1,920 கிராம் தங்கம், 560 கிராம் வெள்ளி நகைகளும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. தொடர்ந்து இன்றும் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடக்கிறது.