கடையம் பகுதி கோயில்களில் இன்று சனிப்பிரதோஷ வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14டிச 2013 11:12
ஆழ்வார்குறிச்சி : சிவசைலம் சிவசைலநாதர் சமேத பரமகல்யாணி அம்பாள் கோயிலில் இன்று (14ம்தேதி) சனிப்பிரதோஷ விழா நடக்கிறது.பிரதோஷ நாளில் சிவ வழிபாடு மிகுந்த பலனை தரும். அதிலும் சனி பிரதோஷம் மகா பிரதோஷம் என அழைக்கப்படுகிறது. இன்று சிவசைலம் சிவசைலநாதர் சமேத பரமகல்யாணி அம்பாள் கோயிலில் இன்று சனிப்பிரதோஷ விழா நடக்கிறது. விழாவில் சுவாமி, அம்பாள், நந்தி பகவானுக்கு விசேஷ அபிஷேகம், சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளுகின்றனர். கடையம் கைலாசநாதர் சமேத பஞ்சகல்யாணி அம்பாள் கோயில், வில்வவனநாதர் சமேத நித்யகல்யாணி அம்பாள் கோயில், ரவணசமுத்திரம் சொக்கலிங்கநாதர் சமேத மீனாட்சியம்பாள் கோயில், ஆழ்வார்குறிச்சி வன்னியப்பர் சமேத சிவகாமியம்பாள் கோயில் உட்பட சுற்று வட்டார சிவன் கோயில்களில் சனி பிரதோஷ விழா நடக்கிறது.