ஆருத்ரா தரிசனம்: தஞ்சை பெரிய கோவில் நடராஜபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18டிச 2013 10:12
தஞ்சாவூர்: இன்று ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு தஞ்சாவூர் பெரிய கோவிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜபெருமானுக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடந்தது. இதில் விபூதி, திரவிய பொடி, மஞ்சள் பொடி, பஞ்சாமிர்தம், தேன் மற்றும் நெய், பால், தயிர், பழவகைகள், கரும்புச்சாறு, இளநீர், சந்தானம் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகங்கள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.