தென்காசி: ஆரியங்காவு ஐயப்பன் கோவிலில் இன்று (24ம் தேதி) நிறைவு விழா நடக்கிறது.இக்கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் திருவிழாக்களில் மார்கழி மகோற்சவ விழா கடந்த 16ம் தேதி துவங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது.ஆரியங்காவு ஐயப்பஷ்டிரா பெண்ணை திருமணம் பேசி முடித்ததாக ஐதீகம், இந்த நிகழ்ச்சி மகோற்சவ விழாவில் ஆண்டு தோறும் நடக்கும். நேற்று பெண் அழைப்பு நடந்தது. மாம்பழத்துறை பகவதி அம்மன் கோவிலில் இருந்து பெண் ஊர்வலமாக ஆரியங்காவு கோவிலுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. கோவிலில் உள்ள விளக்கினை மணப்பெண்ணாக கருதி மேள தாளம் முழங்க ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது. ஊர்வலத்திற்கு ஜெயபால் தலைமை வகித்தார். ஆரியங்காவு சவுராஸ்டிரா மகாஜன சங்க தலைவர் சுப்பிரமணியன், செயலாளர்கள் ஜெயராஜன், ஜெயகண்ணன், மோகன், பொருளாளர் ஆனந்தம் மற்றும் திரளானோர் கலந்து கொண்டனர். இரவு ஆரியங்காவு ஐயப்பன் கோவிலில் மணமகளாக கருதப்படும் விளக்கிற்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இன்று (24ம் தேதி) இரவு பாண்டி முடிப்பு (நிச்சயதார்த்தம்) நிகழ்ச்சி நடக்கிறது. மணப்பெண்ணிற்கு பட்டு, மாலை வழங்குதல், சீர்வரிசை செய்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. நாளை (25ம் தேதி) திருக்கல்யாணம் நடக்கிறது. 26ம் தேதி மகோற்சவம் விழா நிறைவு பெறுகிறது.