காட்டுமன்னார்கோவில்: சிதம்பரத்தில் நடந்த மார்கழி மாத மகோன்னத உபன்யாசம் மற்றும் இசை நிகழ்ச்சியில் வேதசுவாமிநாதன் உபன்யாசம் நடந்தது. சிதம்பரம் புதுத்தெரு வேதபாராயண மடத்தில் நடந்த மார்கழி மாத மகோன்னத உபன்யாச மற்றும் இசை நிகழ்ச்சி கடந்த 19ம் தேதி துவங்கியது. முதல்நாள் திருவையாறு ரமணசர்மா, இரண்டாம் நாள் மற்றும் 3ம் நாள் டாக்டர் ரெங்காச்சாரியார் சுவாமிகள் சொற்பொழிவாற்றினர். நான்காம் நாள் விழாவில் வேதமும் தமிழ்வேதமும் குறித்த சொற்பொழிவு நடந்தது. வேதசுவாமிநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உபன்யாசம் செய்தார். விழாவில் திருவள்ளுவர் பல்கலைகழக சிண்டிகேட் உறுப்பினர் பேராசிரியர் வணங்காமுடி, ரவிசங்கர், ராகவன் மற்றும் பலர் பங்கேற்றனர்.