பொங்கலையொட்டி தை முதல் தேதியில் இருந்தே வேலூர் மாவட்டத்தில் எருது விடும் திருவிழா நடத்த அனுமதிக்க வேண்டும் என்று ஆட்சியரிடம் தமிழ்நாடு எருது விடும் வீர விளையாட்டு பாதுகாப்பு சங்கம் மற்றும் ரசிகர்கள் சங்கத்தினர் வலியுறுத்தினர். தை மாதம் முதல் தேதியில் இருந்து எருது விடும் விழா நடத்த அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு எருது விடும் வீர விளையாட்டு பாதுகாப்பு சங்கம் மற்றும் ரசிகர்கள் சங்கத்தினர் சார்பில் மனு அளிக்கப்பட்டது.