புதுடில்லி: உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கூட்டு வழிபாட்டிற்காக தேவாலயங்களில் கிறிஸ்தவர்கள் குவிந்துள்ளனர். கிறிஸ்துவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது.
போப் பிரான்சிஸ் ஆசீர்: பெத்லஹேமில் இயேசு பிறந்த வரலாற்றை குறிக்கும் கிறிஸ்துமஸ் திருவிழாவை முன்னிட்டு, வாடிகன் சிட்டியில் உள்ள புனித பேராலயத்தில் நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். இரண்டரை மணி நேரம் நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போப் பிரான்சிஸ் இருள் ஆவி நீங்க போராடும் கத்தோலிக்க விசுவாசிகள்.ஏமாற்றத்திற்கு எதிராக நமது இதயம் மூடப்பட்டது என்றும் சிரியா போர், கிறிஸ்துவர்களுக்கு எதிரான தாக்குதல், பிலிப்பைன்ஸ் புயல் பாதிப்பு ஆகியவற்றில் இருந்து மக்களை காப்பாற்றி சீர்திருத்தம் வாக்குறுதி கிடைக்க வேண்டும் என்றார்.இந்த உரை போப் பிரான்சிஸ் பொறுப்பேற்ற முதல் கிறிஸ்துமஸ் திருவிழா உரை.16ஆம் போப் பெனிடிக்டிட் ராஜினாமாவுக்கு பின் பொறுப்பேற்ற போப் பிரான்சிஸ்(77) அர்ஜென்டினாவை சேர்ந்தவர். கிறிஸ்துமஸ் பற்றிய மேலும் தகவலுக்கு கிளிக் செய்யவும் ..