பதிவு செய்த நாள்
25
டிச
2013
10:12
பழநி: பழநிகோயில் அபிஷேக பஞ்சாமிர்தம் சென்ற மாதம் மட்டும் ரூ. 6 கோடியே 73 லட்சத்து 56 ஆயிரத்து 630 க்கு விற்பனையாகியுள்ளது. சபரிமலை சீசனை முன்னிட்டு, பழநிக்கு ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இதனால், சில நாட்களாக அபிஷேக பஞ்சாமிர்த விற்பனை அதிகரித்துள்ளது. நவ.,17 (கார்த்திகை 1) முதல் டிச., 23 வரை, 37 நாட்களில், 6 கோடியே 73 லட்சத்து 56 ஆயிரத்து 630 க்கு, பஞ்சாமிர்தம் விற்றுள்ளது. இது கடந்தாண்டை விட, ரூ. ஒரு கோடியே 32 லட்சத்து 61 ஆயிரத்து 735 அதிகம். இதைப்போலவே, அபிஷேகம், தரிசனம், தங்கரதம், கட்டளைதாரர் கட்டணம், ஜூலை 1 முதல் டிச., 22 வரை, ரூ. 8 கோடியே 91 லட்சத்து 98 ஆயிரத்து14 வசூலாகியுள்ளது. இது கடந்தாண்டை விட ரூ.57 லட்சத்து 96 ஆயிரம் அதிகம். இணை ஆணையர்(பொ) ராஜமாணிக்கம் கூறுகையில், ""அபிஷேக பஞ்சாமிர்தம், டிக்கெட் விற்பனை சென்ற ஆண்டை காட்டிலும், அதிகரித்துள்ளது. நாள் ஒன்றிற்கு, 100 செட் வீதம் (ஒரு செட்டிற்கு 1020 அரைக்கிலோ டப்பா) பஞ்சாமிர்தம் தயார் செய்து, விற்கப்படுகிறது. மேலும் தைப்பூசம், சபரிமலை மண்டல பூஜையை முன்னிட்டு பக்தர்கள் வருகை அதிகரிக்க துவங்கியுள்ளதால், மேலும் விற்பனை அதிகரிக்கும், என எதிர்பார்க்கிறோம், என்றார்.