புதுச்சேரி: சொர்ண பைரவர் கோவிலில், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, விசேஷ யாக பூஜைகள் நடந்தது. புதுச்சேரி-கடலூர் ரோட்டிலுள்ள இடையார்பாளையம் நாணமேடு கிராமத்தில் உள்ள, சேஷா ஆசிரமம் ஸ்ரீ சொர்ண பைரவர் கோவிலில், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, நேற்று மாலை விசேஷ யாக பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகளின் ஆராதனை வைபவத்தை முன்னிட்டு பாதுகா அபிஷேக பூஜை, முத்துகுருக்கள் தலைமையில் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.