பதிவு செய்த நாள்
28
டிச
2013
11:12
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், பக்தர்கள் சுலப தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐயப்ப பக்தர்கள் சீசன், மார்கழியை முன்னிட்டு, இக்கோயிலில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. நாள் ஒன்றுக்கு, சராசரியாக, 40 ஆயிரம் பக்தர்கள் வருகின்றனர்; இதில், 20 ஆயிரம் பேர், கட்டணம் செலுத்தி தரிசனம் செய்கின்றனர். சீசன் அல்லாத நாட்களில், சராசரியாக, 10 ஆயிரம் பக்தர்கள் வருகின்றனர். மார்கழியை முன்னிட்டு, அதிகாலை, 3:00 மணி முதல், பகல், 12:00 மணி வரையும், மாலை, 4:00 முதல் இரவு 9:00 மணி வரையும் நடை திறந்திருக்கும். பொது தரிசனத்தில், நெரிசலை தவிர்க்க, போலீஸ் மற்றும் கோயில் ஊழியர்கள் மூலம் வரிசையில் நிற்கும் பக்தர்களை, தரிசனத்திற்காக விரைவாக அனுப்பவும், அவர்களுக்கு குடிநீர் வழங்கவும், நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் வரிசையில், மின்விசிறிகள் வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.