கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் சுவாமி விவேகானந்தரின் 150வது ஆண்டு விழா மற்றும் விவேக சங்கம் விழா நடந்தது.கள்ளக்குறிச்சி வி.ஏ.எஸ்., மகாலில் நடந்த விழாவிற்கு குமரா மாடர்ன் ரைஸ் மில் நடராஜன் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் ஜெயபிரகாஷ் முன்னிலை வகித்தார். மாநில செய்தி தொடர்பாளர் சடகோபன் இளைஞர்களுக்காக விவேகானந்தர் வழியில் விவேக சங்கமம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினர். முன்னாள் எம்.எல்.ஏ., கோமுகி மணியன், நகர அமைப்பாளர் மகாதேவன் உட்பட பலர் பங்கேற்றனர். மாணவ மாணவிகளுக்கு கை எரிபந்து, உடற்பயிற்சி, வினாடி வினா உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.