சிவகாசி: சிவகாசியில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில், சிவன் கோயில் முன், அனுமன் ஜெயந்தி விழா, ஐந்து நாட்கள் நடந்தது. பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகி ஆசைத்தம்பி தலைமை வகித்தார். சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள் சொற்பொழிவு ஆற்றினார். தினமும் பஜனை நடந்தது. ஏற்பாடுகளை, விஸ்வஹிந்து பரிஷத் மாவட்ட தலைவர் வெள்ளச்சாமி தலைமையில் நிர்வாகிகள் செய்தனர்.