பரமத்தி வேலூர்: கபிலர்மலையில் எழுந்தருளியுள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத் தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு 10-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை பல்லக்கு உத்சவம் நடைபெறுகிறது. 17-ம் தேதி மாலை 4.30 மணிக்கு மேல் தேர் வடம்பிடித்து இழுத்தல் நிகழ்ச்சியும், திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.