ஒடிசாவில் புவனேஸ்வரம் அருகிலுள்ள கோனார்க்கில் சூரியனுக்கு ஒரு கோயில் உள்ளது. இதை விஷ்ணுவின் மகனான சாம்பன் கட்டியதாக புராணங்கள் கூறுகின்றன. சந்திரபாகா நதிக்கரையில் அமைந்த இக்கோயில் பதின்மூன்றாம் நூற்றாண்டில் கட்டியதாகச் சொல்வர். சூரியநாராயணராக இங்கு காட்சியளிக்கும் சூரியன், சங்கு சக்கரத்தை தாங்கி நிற்கிறார். த்யௌ, பிருத்வீ, உஷா, சந்தியா என்னும் நான்கு துணைவியர் உடனிருக்கின்றனர்.