பழநி குளத்தில் தண்ணீர் இல்லாததால் தைப்பூச தெப்போற்சவம் இல்லை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜன 2014 09:01
பழநி: பழநி தைப்பூச நிறைவு விழா நடக்கும், பெரியநாயகியம்மன் கோயில், தெப்பக்குளம் வறண்டுள்ளதால், சுவாமிக்கு தெப்போற்சவம் இல்லாமல் குளத்துகரையில் அபிஷேகம் நடக்கிறது. பழநி தைசப்பூச விழா இன்று மாலை 6மணிக்கு, பெரியநாயகியம்மன் கோயில் அருகேயுள்ள தெப்பக்குளத்தில் தெப்பபோற்சவத்துடன் முடிவடைகிறது.முத்துகுமாரசாமி, வள்ளி-தெய்வானையுடன், சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தேரில் எழுந்தருளி பவனி வருதல், வாணவேடிக்கைகள் நடப்பது வழக்கம். இவ்வாண்டு மழையில்லாததால் தெப்பக்குளத்தில் தண்ணீர் இல்லாமல் புதர்மண்டி கிடக்கின்றது. இதனால், தெப்போற்சவம் கிடையாது. அதற்குபதிலாக சுவாமியை, குளத்து கரையிலுள்ள விநயாகர் கோயில் அருகே வைத்து அபிஷேகம் செய்கின்றனர். இரவு 11.30 மணிக்குமேல் கொடி இறக்குதலுடன் தைப்பூச விழா நிறைவடைகிறது.