பதிவு செய்த நாள்
20
ஜன
2014
10:01
திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில், தை பிரம்மோற்சவ விழா, வரும் 25ம் தேதி துவங்குகிறது. திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில், தை பிரம்மோற்சவம், வரும், 25ம் தேதி துவங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான கருட சேவை 27ம் தேதியும், தேர் திருவிழா, 31ம் தேதியும், தீர்த்தவாரி பிப்., 2ம் தேதியும் நடைபெறுகிறது.
நிகழ்ச்சி விவரம்:
தேதி காலை மாலை/இரவு
ஜன., 25 த்வஜாரோஹணம் 5:00 மணி சிம்ம வாகனம் 7:00 மணி.
ஜன., 26 ஹம்ஸ வாகனம் 7:30 மணி சூரிய பிரபை - 7:00 மணி.
ஜன., 27 கருட சேவை, 5:00 மணி அனுமந்த வாகனம், 8:00 மணி.
ஜன., 28 சேஷ வாகனம் 7:00 மணி சந்திர பிரபை 7:00 மணி.
ஜன., 29 நாச்சியார் திருக்கோலம் 5:00 மணி யாளி வாகனம் - 7:00 மணி.
ஜன., 30 தை அமாவாசை 6:00 மணி வெள்ளிச்சப்பரம் 4:00 மணி.
ஜன., 31 தேரோட்டம் 7:00 மணி தேரிலிருந்து எழுந்தருளல் 5:30 மணி.
பிப்., 1 குதிரை வாகனம் காலை 8:30 மணி.
பிப்., 2 தீர்த்தவாரி 10:30 மணி விஜயகோடி விமானம் 7:30 மணி.
பிப்., 3 த்வாதச ஆராதனம், 11:00 மணி த்வஜ அவரோஹனம் 10:30 மணி.