ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில், 30 நாட்களுக்கு பின்னர் நேற்று முன்தினம் உண்டியல் திறக்கப்பட்டு, ஸ்ரீ பர்வதவர்த்தினி பெண்கள் பள்ளி மாணவிகள், கோயில் ஊழியர்கள், இருநாள்களாக காணிக்கைகளை எண்ணினர். 69 லட்சத்து 38 ஆயிரத்து 735 ரூபாய் தங்கம் 54 கிராம், வெள்ளி 9 கிலோ 70 கிராம் இருந்தன. கோயில் இணை கமிஷனர் செல்வராஜ், இருக்கன்குடி மாரியம்மன் உதவி கமிஷனர் தனபால், கோயில் சூப்பரண்டட் கக்காரின், பேஷ்கார்கள் ராதா, அண்ணாதுரை, கமலநாதன் மேற்பார்வையிட்டனர்.