ஆனைமலை: மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழாவையொட்டி, அடிப்படை வசதிகள் மேம் படுத்துதல் குறித்த ஆலோசனைக்கூட்டம் கோவில் அலுவலகத்தில் உதவி ஆணையர் அனிதா முன்னிலையில் நேற்று நடந்தது. கூட்டத்தில்,"அருளாளிகள்,முறைதாரர்கள் அர்ச்சகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று தங்களின் கருத்துகளை தெரிவித்தனர். குண்டம் திருவிழாவின் போது கொடியேற்றம், மயான பூஜை, குண்டம் பூ வளர்த்தல், குண்டம் இறங்குதல் போன்ற நிகழ்சிகளின் போது செய்ய வேண்டிய பணிகள் குறித்து கூட்டத்தில் பேசப்பட்டது.கடந்த முறை இருந்த குறைபாடுகள் குறித்து கேட்டறியப்பட்டது. குண்டம் பூ வளர்க்கும் இடத்தில் உள்ளவர்களுக்கு தண்ணீர் வசதி செய்து தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. கூட்டத்தில் அனைத்து அருளாளிகள், முறைதாரர்கள், அர்ச்சகர்கள் என அனைத்து தரப்பினரும் பங்கேற்றனர்.