குருவாயூரில் வேலைப்பாடு மிகுந்த கருடன் சிற்பத்தை ஓர் அரசமரத்தடியில் காணலாம். இதற்கு மஞ்சுள விருட்சம் என்று பெயர். மஞ்சுளா என்ற பக்தை தினந்தோறும் மகிழ மாலையை நம்பூதிரி மூலம் குருவாயூரப்பனுக்கு சாத்துவது வழக்கம். ஒருநாள் கோயில் சாத்தப்பட்டிருக்கவே பாகவதரான பூந்தானம் வாக்குப்படி மாலையை அரசமரத்திற்கு இட்டுச் சென்றாள். மறுநாள் காலை விசுவரூப தரிசனத்தில் பார்த்தால் அம்மாலை குருவாயூரப்பன் கழுத்தில் பொலிந்தது. அன்று முதல் அம்மரம் மஞ்சுள மரம் எனப்பட்டது.